shopersnest
பாவை விளக்கு
பாவை விளக்கு
Couldn't load pickup availability
பாவை விளக்கு-திரு அகிலன் அவர்களால் புனையப்பட்ட சமூக நாவல் இந்த நூற்றாண்டுத் தமிழின் தலை சிறந்த உரைநடைக் காவியம் என இலக்கியத் திறனாய்வாளர்கள் பலரால் பாராட்டப்பெறும் புதினம் இது பல மொழிகளில் மொழிபேர்க்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து திரைப்படமாகவும் வெளியானது. ஒரு தனி மனிதனின் உள்ளக் குமுறல்கள் மற்றும் அவன் வாழ்வில் ஏற்படும் போராட்டங்களும். பிறகு அவனுடன் கூட ஒன்றாகப் பயணிக்கும் பெண்களும், அவர்கள் அவனிடம் வைத்திருக்கும் பாசத்தை உணர்த்தும் கதை. கதையின் நாயகன் தன்தந்தையின் கனவை நினைவாக்க முற்பட்டானா? அவன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை, கதையின் ஓட்டத்தை மிகச் சுவாரசியமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் எழுத்தாளர் அகிலன் அவர்கள். தணிகாசலத்தின் சிறு வயது காதல்.. அவனது முதல் காதல் அந்தக் காதலியின் பெயர் (செங்கமலம்) பெயருக்கேற்ப அவளை அழகாகச் சித்தரித்து எழுத்து வடிவில் கொடுத்திருப்பார் எழுத்தாளர். தேவகிஅக்கா எப்படித் தன் மனதைத் தானாக மாற்றிக்கொண்டு அவனுடன் பயணிக்கிறாள் என்பதை நேர்த்தியாகச் சொல்லியிருப்பார் எழுத்தாளர். நாயகனின் மனைவி(கௌரி)சிறு வயது முதல் அவன் மேல் கொண்ட பாசம், பிரியம் மற்றும்அவள் கடைசிவரையில் தணிகாசலத்தின் மனதில் எப்படிக் குடியிருக்கிறாள் என்பதை நளினமாக . எடுத்துரைத்திருப்பார்.
Share
