shopersnest
கொற்றவை
கொற்றவை
Couldn't load pickup availability
இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் பரபரப்பாக விற்பனையான புத்தகங்களில் ‘கொற்றவை’யும் ஒன்று.தனித்தமிழில் எழுதப்பட்டுள்ள கொற்றவை, ‘புதுக்காப்பியம்’ என்கிற அடைமொழியோடு வெளிவந்திருக்கிறது.
சிலப்பதிகாரத்தை அடித்தளமாகக் கொண்டு கொற்றவை எழுதப்பட்டிருப்பினும், அதனினும் விரிந்த களத்தில், குமரிக்கரையிலிருந்து தொடங்குகிறது கொற்றவை. இதன் ஐந்து பகுதிகளிலும் முறையே நீர், காற்று, நிலம், எரி, வான் என்று பகுக்கப்பட்டுள்ளன.
குமரி நிலத் தமிழ்க்குலத்தின் தொன்மையைப் பேசத் தொடங்கும் பகுதி நீராகவும், கண்ணகி-கோவலன்-மாதவி வாழ்ந்த வாழ்வு காற்றாகவும், புகாரிலிருந்து கண்ணகி கோவலன் வெளியேறி மதுரை செல்லும் பகுதி நிலமாகவும், மதுரை எரியுண்ட காதை எரியாகவும், கண்ணகி தெய்வமான பகுதி வானாகவும் பேசப்பட்டுள்ளன.
தாய்த்தெய்வம், தாய்மையின் கனற்சினம், தாய்மையின் எல்லையில்லாப் பெருங்கருணை ஆகியவற்றை விரிவுறப் பேசும் கொற்றவை, சிலப்பதிகாரத்தின் அரசபாட்டையில் நடை பயின்றாலும் புதிய எல்லைகளிலும் பயணமாகிறது.
Share
