Skip to product information
1 of 1

shopersnest

சூல்

சூல்

Regular price 5.750 KWD
Regular price Sale price 5.750 KWD
Sale Sold out
Shipping calculated at checkout.
Quantity

சாகித்திய அகாதெமி விருது (2019)

அடித்தட்டு மக்களின் வாழ்க்கைப்பாடுகளைப் பிரதானப் புனைவுலகாகக்கொண்ட சோ.தர்மனின் மூன்றாவது நாவல் `சூல்’. வேளாண்மையோடு பின்னிப்பிணைந்த தென் தமிழக மக்களின் வாழ்க்கை, அவர்களின் இயற்கை சார்ந்த அறிவு, அறம் சார்ந்த நம்பிக்கைகள், கொண்டாட்டங்கள் நவீன அறிவியல் மற்றும் அரசியலால் அவை காணும் வீழ்ச்சி... ஆகியவற்றை அந்த நிலத்தின் பச்சையத்துடன் பதிவுசெய்கிறது `சூல்’ நாவல். கண்மாயும் நீரும் வேளாண்மையுமே நாவலின் முக்கியப் பேசுபொருட்கள். ஒரே வாசிப்பில் முடித்துவிடும் அளவுக்கான எளிய மொழிநடை, நாவலின் பெரும் பலம். நாவல் எங்கும் கண்மாய் பலமுறை சூலியின் வயிற்றோடு உவமை செய்யப்பட்டுக்கொண்டே வருகிறது. சோ.தர்மன் அழுத்தமாகச் சொல்ல விரும்புவதும் அதைத்தான். `நீர்நிலைகளே இந்த உலகின் உயிர்சுமக்கும் சூல்’.

View full details